நமது நாடார் சமுதாய சொந்தங்களில் உள்ள மகளிர் அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த "மகளிர் சேனை" அமைப்பாகும்.
இந்த மகளிர் சேனை அமைப்பானது நம் நாடார் மஹாஜன சங்க கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மகளிர் அமைப்பாகும்.
கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் அரசியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டுதல்களை, மகளிர் சேனை அமைப்பு செயல்படுத்தும்.
ஏற்கனவே சுய தொழில் செய்வோர்க்கு, அதனை இணைய தளத்தில் சந்தைப்படுத்துதலையும்., சுய தொழில் செய்ய ஆசைப்படும் மகளிர்க்கு அதற்கான சரியான வழிகாட்டுதலையும் ஏற்படுத்தி தரும் அமைப்பாக நம் "மகளிர் சேனை" அமைப்பு செயல்படும்.